ADDED : ஏப் 19, 2025 10:20 PM
நொய்டா:அடுக்குமாடி குடியிருப்பின் 21வது மாடியில் இருந்து குதித்து, 21 வயது கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்தவர் உன்னத்,21. நொய்டா 39வது செக்டாரில் உள்ள 'லோட்டஸ் ப்ளூ பேர் சொசைட்டி' என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். ஹரியானா மாநிலம் குருகிராம் தனியார் கல்லூரியில் இதழியல் படித்தார்.
நேற்று முன் தினம் மாலை நண்பருடன் ஒரு விருந்துக்குச் சென்ற உன்னத், இரவு தாமதமாக வீடு திரும்பினார். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, கட்டடத்தின் 21வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், உன்னத் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது.

