ADDED : ஏப் 09, 2025 10:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்; வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி ஜெயஸ்ரீ. தம்பதியருக்கு விஸ்வஜித், 12, ஸ்ரீநந்தனா என, இரு குழந்தைகள் இருந்தனர். அங்குள்ள பள்ளியில் படித்து வந்தனர்.
விடுமுறையை முன்னிட்டு, மனோஜ், குடும்பத்துடன் லெக்கிடி பகுதியில் உள்ள மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை விஸ்வஜித், நண்பர்களுடன் வீட்டின் அருகே உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றனர்.
ஆற்றில் இறங்கிய விஸ்வஜித் தாழ்வான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினார்.
இதைக் கண்டு நண்பர்கள் அலறி சப்தமிட்டனர். ஓடிவந்த அப்பகுதி மக்கள், ஆற்று நீரில் தேடி சிறுவனின் உடலை மீட்டனர். பழயன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

