ADDED : ஜன 30, 2025 08:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாசன்; மைசூரின், கே.ஆர்.நகரில் வசிப்பவர் முஜாவீர், 17. இவர் முதலாம் ஆண்டு பி.யு.சி., படிக்கிறார். இவர் நேற்று முன்தினம் மாலை, கே.ஆர்.நகரில் இருந்து ஹாசனுக்கு, எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தார்.
ஹொளேநரசிபுரா பகுதியில் சென்ற போது, ரயில் பெட்டியின் படி மீது ஒரு காலை வெளியே நீட்டியபடி நின்றிருந்தார். இவ்வேளையில் நிலை தடுமாறிய முஜாவீர், ரயிலில் இருந்து ஹேமாவதி ஆற்றில் விழுந்தார். ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால், பாறையை பிடித்து கொண்டு உதவி கேட்டு கூச்சலிட்டார்.
இதை பார்த்த அப்பகுதியினர், ஆற்றில் இறங்கி மாணவரை காப்பாற்றினர். காயமடைந்திருந்த அவரை, மருத்துவமனையில் சேர்த்தனர்.

