தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ஜே.என்.யு., பல்கலையில் மாணவர்கள் மோதல்

 ஜே.என்.யு., பல்கலையில் மாணவர்கள் மோதல்

 ஜே.என்.யு., பல்கலையில் மாணவர்கள் மோதல்


ADDED : பிப் 24, 2026 12:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 12:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்களிடையே நேற்று அதிகாலை ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர்.

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில், நேற்று முன் தினம் மாலை, கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான ஜே.என்.யு.எஸ்.யு., அமைப்பு மாணவர்கள் திரண்டனர்.

துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் பதவி விலக வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்தப் போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. பல்கலை நிர்வாகம் சார்பில் போராட்டம் நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை.

இந்நிலையில், நேற்று அதிகாலை 1:30 மணிக்கு, ஏ.பி.வி.பி., எனப்படும் பா.ஜ.,வின் மாணவர் அமைப்பினர் திரண்டு, துணைவேந்தருக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இதையடுத்து, இரு பிரிவு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியதால், பல்கலை வளாகத்தில் வன்முறை வெடித்தது. பல்கலை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய கல்வி அமைச்சகத்துக்கு பேரணியாக சென்று, மனு கொடுக்க ஜே.என்.யு.எஸ்.யு., அமைப்பு முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில், பல்கலையில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படு என பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us