ADDED : செப் 06, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:டில்லி தேசிய உயிரியல் பூங்கா இயக்குநர் சஞ்சீத் குமார் கூறியதாவது:
டில்லி உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் பரவியதை அடுத்து கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பொதுமக்கள் வருகை தடை செய்யப்பட்டு, சமீபத்தில் பூங்கா மூடப்பட்டது.
சுகாதாரப் பிரிவினர் பூங்கா வளாகம் முழுதும் தடுப்பு மருந்து தெளித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தொற்று தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன. பறவைக் காய்ச்சல் தொற்று பரவல் விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.
உலக சுகாதார அமைப்பு, மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் மற்றும் டில்லி அரசின் கால்நடை பராமரிப்புத் துறை நிபுணர்கள், உயிரியல் பூங்காவை நேற்று முன் தினம் பார்வையிட்டனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர்.