2வது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
2வது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
UPDATED : பிப் 04, 2024 05:43 PM
ADDED : பிப் 04, 2024 02:11 PM

விசாகப்பட்டணம்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய அணி 255 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனையடுத்து இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 396 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி 253 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. இதனால் 143 ரன் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. இரண்டாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 28 ரன் எடுத்து 171 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
3வது நாளான இன்று, ரோகித் சர்மா (13), ஜெய்ஸ்வால் (17), ஸ்ரேயாஸ் (29), ரஜட் படிதர் (9) என சிறிய இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தனர். நிலைத்து நின்று விளையாடிய சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். அவர் 104 ரன்களில் கேட்சானார். அக்சர் படேல் (45) அரைசதம் அடிக்காமல் ஏமாற்றினார். பின்வரிசையில் அஸ்வின் (29) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். 255 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனஇந்திய அணி 398 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் 399 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடுகிறது.
3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது.