முறைகேடுகளால் பெறும் வெற்றி; மீண்டும் குற்றம் சாட்டுகிறார் கார்கே
முறைகேடுகளால் பெறும் வெற்றி; மீண்டும் குற்றம் சாட்டுகிறார் கார்கே
ADDED : அக் 31, 2024 08:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: முறைகேடுகள் மூலமாகவே, பிரதமர் மோடி தேர்தலில் வெற்றி பெறுகிறார்,' என்று காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டினார்.
இது குறித்து பெங்களூருவில் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:பிரதமர் மோடி, முறைகேடு செய்வதன் மூலமே தேர்தலில் வெற்றி பெறுகிறார். அவர் உண்மையில் எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. எல்லாமே முறைகேடு தான்.வாக்காளர் பட்டியலில் இருந்து 10 ஆயிரம் பேரை நீக்கி விட்டு, புதிதாக 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பெயரை சேர்க்கச் செய்கிறார். இது தான் உண்மை. ஆனால் இதை எப்படி நிரூபணம் செய்வது என்பது தான் கேள்வி.இவ்வாறு கார்கே கூறினார்.தன் குற்றச்சாட்டுக்கு ஆதரவாக, மின்னணு ஓட்டு இயந்திரங்களின் நம்பகத்தன்மை பற்றி தொழிலதிபர் எலான் மஸ்க் கூறியதையும் சுட்டிக்காட்டினார் கார்கே.

