பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கொலை செய்த மகள் உட்பட 5 பேர் கைது
பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கொலை செய்த மகள் உட்பட 5 பேர் கைது
ADDED : நவ 01, 2025 12:35 AM

சுப்பிரமணியபுரா: பெண் தற்கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. துண்டால் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, உடலை துாக்கில் தொங்கவிட்ட மகள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு, உத்தரஹள்ளியில் வசித்தவர் நேத்ராவதி, 34. இவரது கணவர் ஐந்து ஆண்டு களுக்கு முன் பிரிந்து செ ன்றுவிட்டார். தன், 15 வயது மகளுடன் நேத்ராவதி வாழ்ந்து வந்தார்.
சிறுமி, தனியார் பள் ளியி ல் 10ம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த 26ம் தேதி காலை, வீட்டின் படுக்கை அறையில் சிறுமியின் தாய் நேத்ராவதி மர்மமான முறையில் துாக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்தார்.
குடும்ப தகராறில் அவர் துாக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் என கருதி, சுப்பிரமணி யபு ரா போலீசார் முதற்கட்ட விசாரணையை துவக்கினர்.
இந்நிலையில், நேத்ராவதியின் அக்கா அனிதா, சுப்பிரமணியபுரா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், 'என் தங்கை நேத்ராவதி சாவில் சந்தேகம் உள்ளது. அவர் இறந்த நாளில் இருந்து, அவரது மகளை காணவில்லை' என்று கூறி இருந்தார்.
இதனால், நேத்ராவதியின் மகளை போலீசார் தேட ஆரம்பித்தனர். தலகட்டபுராவில் உள்ள தோழி வீட்டில் இருப்பதாக கூறப்பட்டது.
அங்கு போலீசார் சென் றபோது, பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள ககலிபுராவுக்கு, நேத்ராவதியின் தாய் வீடான பாட்டி வீட்டிற்கு சென்றது தெரிந்தது.
நேற்று முன்தினம் அங்கு சென்ற போலீசார், சிறுமியை கண்டு பிடித்து விசாரித்தனர். 15 வயதான தன் ஆண் நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து, தாயை கொலை செய்த அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் நேத்ராவதி மகள் தெரிவித்தார்.
அவரை போலீசார் கைது செய்து, பெங்களூரு அழைத்து வந்தனர். அவர் தகவல் கொடுத்ததை அடுத்து, ஆண் நண்பர்களான நான்கு மைனர்களும் கைது செய்யப்பட்டனர். ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
இந்த வழக்கு குறித்து, தென்மேற்கு மண்டல டி.சி.பி., அனிதா ஹட்டன்னவர் நேற்று கூறியதாவது:
கொலையான நேத்ராவதியின், 15 வயது மகளுக்கு, அவர் வயதைச் சேர்ந்த சிறுவனுடன் காதல் இருந்தது. 25ம் தேதி இரவில், நேத்ராவதி துாங்கியதும், அவரது மகள் காதலனை தன் வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார்.
காதலனும், அவரது நண்பர்கள் மூன்று பேரும் நேத்ராவதி வீட்டிற்கு வந்தனர். காதலனுடன் இருந்த மகளை நேத்ராவதி அடித்துள்ளார்.
கோ பம் அடைந்த சிறுமி, தன் காதலன், அவரது நண்பர்களுடன் சேர்ந்து தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். போலீசில் இருந்து தப்பிக்க, நேத்ராவதியை துாக்கில் தொங்கவிட்டது விசாரணையில் தெரிய வந் துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

