UPDATED : மார் 03, 2024 10:31 AM
ADDED : மார் 03, 2024 09:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லியில் நேற்று இரவு திடீரென பலத்த மழை பெய்தது. இதில் நகரில் முக்கிய பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனுடன் பலத்த காற்றும் வீசியது.
வானிலை மாற்றம் காரணமாக இந்த மழை பெய்தது. இது போல் பஞ்சாப், ஹரியானா, உபி.,மாநிலத்திலும் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பலத்த மழையால் குப்வாரா மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. பல இடங்களை மழைநீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

