ADDED : மார் 15, 2024 01:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பிரபல எழுத்தாளரும், கல்வியாளருமான சுதா மூர்த்தியை, ராஜ்யசபா நியமன எம்.பி.,யாக நியமித்து சமீபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார்.
சுதா மூர்த்தி, 'இன்போசிஸ்' நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி. இந்நிலையில் நேற்று பார்லி.,யில் உள்ள ராஜ்யசபா சேம்பரில் நடந்த நிகழ்ச்சியில் சுதாவுக்கு, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

