ரத்தத்தில் கொழுப்பை தடுக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா
ரத்தத்தில் கொழுப்பை தடுக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா
ADDED : டிச 13, 2024 11:06 PM

வாழ்நாள் முழுதும் ஆரோக்கியத்துடன் இருக்க, சில காய்கறிகள் மற்றும் கிழங்குகளை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் ஒன்றான சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து பரோட்டா செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
செய்முறை
▶ சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக வேகவைக்க வேண்டும்.
▶ ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கோதுமை மாவு, உப்பு சேர்த்து, வழக்கம் போல் சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.
▶ இதனுடன் வேக வைத்த சர்க்கரை வள்ளி கிழங்கு, மிளகாய் துாள், உப்பு சேர்த்து ஒரு வாணலியில் போட்டு நன்றாக கிளறி விடவும்.
▶ ஏற்கனவே பிசைந்து வைத்துள்ள சப்பாத்தி மாவை, கட்டையில் வைத்து தேய்த்து, அதற்கு நடுவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கலவையை வைத்து, ரோல் செய்யவும்.
▶ இதை, சூடான சப்பாத்தி கல்லில் வைத்து, சுட்டு எடுத்தால் போதும், சுவையான மற்றும் ஆரோக்கியமான சர்க்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா ரெடி. இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது கொஞ்சம் கார சட்னி வைத்தும் சாப்பிடலாம்.
- நமது நிருபர் -

