ADDED : ஜன 20, 2024 06:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாசன்: குடும்ப பிரச்னையால், போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஹாசன், சகலேஸ்புராவில், போலீஸ் குடியிருப்பில் வசித்த சோமசேகர், 39, போலீஸ் துறையில் ஏட்டாக பணியாற்றினார். மாவட்ட ஆயுதப்படையில், 112 அவசர சேவை போலீஸ் வாகனத்தின் ஓட்டுனராக இருந்தார்.
சோமசேகரின் மனைவி ஆசிரியையாக பணியாற்றுகிறார். குடும்ப பிரச்னை காரணமாக, தம்பதிக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது. தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக, எஸ்.பி.,யிடம், ஏட்டு சோமசேகரின் மனைவி புகார் அளித்தார்.
இதனால் வருத்தமடைந்த சோமசேகர், நேற்று முன் தினம் நள்ளிரவு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சகலேஸ்புரா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.