ADDED : மார் 11, 2024 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மங்களூரு : ''சுமலதா அம்பரிஷ் என் தாயார். நான் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருப்பேன்,'' என நடிகர் தர்ஷன் தெரிவித்தார்.
தட்சிண கன்னடா மங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
பெற்ற தாயை யாராவது விட்டு தருவார்களா. நேற்று வரை நான் சுமலதாவுடன் இருந்தேன். இப்போது கைவிட்டால் நன்றாக இருக்குமா. உங்கள் வீட்டில் தாயை விட்டு கொடுப்பீர்களா. சுமலதா என் தாய். மற்றவருக்காக இவரை விட்டு தர முடியாது. எப்போதும் அவருக்கு பக்கபலமாக நிற்பேன்.
மங்களூரின், குத்தாரு கொரகஜ்ஜா தலத்தில், வேண்டுதல் கோரலாம் என, நண்பர்களுடன் நான் வந்தேன்.
இவ்வாறு அவர்கூறினார்.

