ADDED : பிப் 16, 2024 07:04 AM

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மாண்டியா எம்.பி., சுமலதா, அபுதாபி சுவாமி நாராயண் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்று வந்துள்ளார்.
மாண்டியா சுயேச்சை எம்.பி.,யாக பதவி வகிக்கும் நடிகை சுமலதா, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்.
சில நாட்களுக்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோரை புதுடில்லியில் சந்தித்து, மாண்டியாவில் போட்டியிட வாய்ப்பு வழங்கும்படி வலியுறுத்தினார்.
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற, அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோவில் திறப்பு விழாவில், சுமலதாவும் பங்கேற்றுள்ளார்.
தொகுதி கை நழுவி விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் அவர், அபுதாபி சென்று வந்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது.
'எக்ஸ்' வலை தளத்தில் அவர் குறிப்பிட்டுஉள்ளதாவது:
அமைதி, நல்லிணக்கம், ஆன்மிகத்தின் எடுத்துக்காட்டாக விளங்கும் சுவாமி நாராயண் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்றது, எனக்கு பெருமை. கடவுள் ஆசிர்வாதம் கிடைத்துள்ளது.
உலகமே புகழும் நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து, அபுதாபியில் அவர் ஆற்றிய உரை, அரபு நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இருக்கும் உறவை மேம்படுத்துவதாக இருந்தது.
இத்தகைய பிரதமர் நமக்கு கிடைத்திருப்பது புண்ணியம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்
- நமது நிருபர் -.