மோடியால் நாட்டிற்கு அதிர்ஷ்டம் 'ஐஸ்' வைக்கும் சுமலதா
மோடியால் நாட்டிற்கு அதிர்ஷ்டம் 'ஐஸ்' வைக்கும் சுமலதா
ADDED : மார் 07, 2024 03:49 AM

மாண்டியா : ''பிரதமர் நரேந்திர மோடி கிடைத்திருப்பது, நாட்டிற்கு அதிர்ஷ்டம்,'' என, மாண்டியா 'சீட்'டுக்காக சுமலதா 'ஐஸ்' வைத்துள்ளார்.
மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாண்டியா காங்கிரஸ் வேட்பாளரை அறிமுகப்படுத்த, அரசு நிதியில் மாண்டியாவில் புதனுார் உற்சவம் நடத்தி உள்ளனர்.
பணம் கொடுப்பவர்களுக்கு 'சீட்' வழங்கும் கலாசாரம் காங்கிரசில் உள்ளது. வேட்பாளரை, அவர்கள் பணம் கொடுத்து வாங்கலாம். மாண்டியா மக்களை பணத்தால் வாங்க முடியாது.
நான் பா.ஜ.,வில் சேருவதற்கு சில தொழில்நுட்ப பிரச்னை உள்ளது. அந்த பிரச்னை முடிந்ததும், பா.ஜ.,வில் இணைவேன். இந்த விஷயத்தை மீண்டும், மீண்டும் பேசி எந்த பயனும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் அடிக்கடி மாண்டியா வந்து உள்ளேன்.
வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைக்கிறேன். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டால், அதன்பின்னர் எந்த பணிகளும் செய்ய முடியாது. மாண்டியா வேட்பாளர் யார் என்று, பா.ஜ., அறிவிக்கும் வரை 'சீட்' யாருக்கும் உறுதி இல்லை.
கடந்த ஐந்து ஆண்டு கால செயல்பாட்டை பார்த்து, எனக்கு பா.ஜ., 'சீட்' கொடுக்கும். பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை, நாட்டிற்கான அவரது வளர்ச்சி மந்திரம், என்னை வெகுவாக கவர்ந்து உள்ளது. அவர் கிடைத்திருப்பது நாட்டிற்கு அதிர்ஷ்டம்.
இவ்வாறு அவர் கூறினார்.

