ADDED : ஜன 06, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாபர் மசூதி வழக்கில், முஸ்லிம் தரப்பைச் சேர்ந்த மனுதாரர் இக்பால் அன்சாரி என்பவருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அயோத்தியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்கள் இக்பால் அன்சாரியிடம் நேற்று அழைப்பிதழ் வழங்கினர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''அயோத்தியில் கடவுள் ராமரின் சிலையை நிறுவி, பிரதிஷ்டை செய்ய இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அயோத்தி, ஹிந்து, முஸ்லிம், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள் என அனைவருக்குமான நல்லிணக்க பூமி. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாடு முழுதும் உள்ள முஸ்லிம்கள் மதிக்கின்றனர்,'' என்றார்.