sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'இண்டி' கூட்டணியின் தலைவராக மம்தாவுக்கு ஆதரவு! ராகுல் மீதான அதிருப்தியால் சரத் பவார் அறிவிப்பு

/

'இண்டி' கூட்டணியின் தலைவராக மம்தாவுக்கு ஆதரவு! ராகுல் மீதான அதிருப்தியால் சரத் பவார் அறிவிப்பு

'இண்டி' கூட்டணியின் தலைவராக மம்தாவுக்கு ஆதரவு! ராகுல் மீதான அதிருப்தியால் சரத் பவார் அறிவிப்பு

'இண்டி' கூட்டணியின் தலைவராக மம்தாவுக்கு ஆதரவு! ராகுல் மீதான அதிருப்தியால் சரத் பவார் அறிவிப்பு

24


ADDED : டிச 09, 2024 05:04 AM

Google News

ADDED : டிச 09, 2024 05:04 AM

24


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: '' இண்டி கூட்டணிக்கு தலைமை தாங்க, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு முழு தகுதி உள்ளது,” என தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத் சந்திர பவாரின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். அவரது கருத்து அந்த கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்த முடிவு செய்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள், 'இண்டி' கூட்டணியை உருவாக்கின. திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி, தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்த மெகா கூட்டணியில் இடம்பெற்றன.

நெருக்கடி


தலைமை குறித்து உரிய முடிவு எடுக்கப்படாதது, கூட்டணியில் விரிசல் என பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவே லோக்சபா தேர்தலை இண்டி கூட்டணி சந்தித்தது.

எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், லோக்சபாவில் எதிர்க்கட்சி வரிசையில் இண்டி கூட்டணி அமர்ந்தது. அடுத்து நடந்த ஜம்மு - காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தலிலும் அக்கூட்டணி தோல்வியை சந்தித்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், இண்டி கூட்டணி பெரும் தோல்வியடைந்து, எதிர்க்கட்சி வரிசையில் கூட இடம்பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்பதால், அக்கட்சியின் எம்.பி., ராகுலின் தலைமையில் இண்டி கூட்டணி செயல்படுவதாக கூறப்படும் நிலையில், தேர்தல் தோல்வி காரணமாக தலைமையில் மாற்றம் வேண்டும் என்ற பேச்சு எழுந்தது.

இந்த சூழலில், கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், 'நான் இண்டி கூட்டணியை உருவாக்கினேன். ஆனால், அவர்களால் அதை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பதை பார்க்க விரும்புகிறேன்.

'ஆனால், அவர்கள் என்னை பொருட்படுத்தவில்லை. நான், அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் சிறந்த உறவை பேணி வருகிறேன். வாய்ப்பு கிடைத்தால், இண்டி கூட்டணியின் சுமுகமான செயல்பாட்டை உறுதி செய்வேன். 'அந்த கூட்டணிக்கு தலைமை ஏற்க தயார். மேற்கு வங்கத்தின் வெளியே செல்ல நான் விரும்பவில்லை; ஆனால், இங்கிருந்தபடியே கூட்டணியை இயக்க முடியும்' என, தெரிவித்திருந்தார்.

மம்தாவின் இந்த கருத்து, இண்டி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. சமாஜ்வாதி கட்சி, மம்தாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. இந்நிலையில், மஹாராஷ்டிராவின் கோலாப்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 'தேசியவாத காங்., கட்சி - சரத் சந்திர பவார்' தலைவர் சரத் பவார், மம்தா தலைவராவதற்கு பச்சைக்கொடி காண்பித்து உள்ளார்.

விழிப்புணர்வு


அவர் கூறுகையில், “நாட்டில் உள்ள திறமையான தலைவர்களில் மம்தாவும் ஒருவர். கூட்டணிக்கு தலைமை தாங்குவதாக சொல்வதற்கு அவருக்கு உரிமை உள்ளது. ''பார்லி.,க்கு அவர் அனுப்பி வைத்துள்ள எம்.பி.,க்கள் கடின உழைப்பாளிகள்; அதேசமயம் விழிப்புணர்வு உடையவர்கள்,” என தெரிவித்தார்.

பார்லிமென்டில் நடக்கும் போராட்டம், தேர்தல் நேரத்தில் தொகுதி பங்கீடு விஷயத்தில் கூட்டணி கட்சிகளை அலட்சியப்படுத்துவது போன்ற ராகுலின் செயல்பாடுகளால், கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், சரத் பவாரின் கருத்து, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மகிழ்ச்சியான விஷயம்


எதிர்க்கட்சி கூட்டணியில் திரிணமுல் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு அதிக பொறுப்பு உள்ளது. இந்த கூட்டணியில் திரிணமுல் தலைவர் மம்தா, முக்கியமான பொறுப்பை ஏற்க முன்வந்தால், அது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

- சுப்ரியா சுலே,

எம்.பி., - தேசியவாத காங்., சரத் சந்திர பவார்








      Dinamalar
      Follow us