ADDED : மே 05, 2025 12:43 AM

குவஹாத்தி: ஜம்மு - காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து பஹல்காம் தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ., அமினுல் இஸ்லாம் உள்பட 37 பேர் அசாமில் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதாக, ஹஜோய் மற்றும் தெற்கு சல்மரா - மங்கசார் மாவட்டங்களை சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''இந்திய மண்ணில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய தேசவிரோதிகள் 39 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பியவர்களின் கால்கள் முறிக்கப்படும்,'' என, எச்சரித்துள்ளார்.