UPDATED : ஜூலை 29, 2025 08:13 AM
ADDED : ஜூலை 29, 2025 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாடு முழுதும் தெருநாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
இது குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா நேற்று கூறியதாவது:
பல முன்னணி செய்தி நிறுவனங்கள், நாளிதழ்களில் தினந்தோறும் வெளியாகும் நுாற்றுக்கணக்கான நாய் கடி சம்பவங்களும் அதனால் ஏற்படும், 'ரேபிஸ்' பாதிப்புகளும் கவலையை ஏற்படுத்துகிறது.
ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க இருக்கிறது.
செய்திகளின் நகல்களை இணைத்து இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் பட்டியலிடும்படி உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- டில்லி சிறப்பு நிருபர் -