sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

சிலை கடத்தல் தடுப்பில் தீவிரம் தேவை தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

/

சிலை கடத்தல் தடுப்பில் தீவிரம் தேவை தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

சிலை கடத்தல் தடுப்பில் தீவிரம் தேவை தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

சிலை கடத்தல் தடுப்பில் தீவிரம் தேவை தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

4


UPDATED : செப் 13, 2025 08:10 AM

ADDED : செப் 13, 2025 12:31 AM

Google News

4

UPDATED : செப் 13, 2025 08:10 AM ADDED : செப் 13, 2025 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'சிலை கடத்தல் தடுப்பு விவகாரங்களில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்கின் விசாரணையில், கோப்புகள் திருடப்பட்ட விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு விசாரணை கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இது தொடர்பான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்தினா தலைமையிலான அமர்வு முன் நேற்று நடந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், 'கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டு விட்டனவா? சிலைகள் எவ்வாறு வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன?' என, கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், 'மொத்தம், 11 சிலைகள் காணாமல் போனதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

'அதில் ஐந்து சிலைகள் மீட்கப்பட்டு விட்டன. மற்ற சிலைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன' என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் சிறப்பு அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையை நீங்கள் பார்த்தீர்களா? அந்த அறிக்கையில் பல சிலைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என ஆவணங்களில் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தை பொறுத்தவரை தமிழக அரசு தீவிரமாக செயல்பட வேண்டும்.

'இது நம் கலாசாரம், பாரம்பரியம் தொடர்பான விஷயங்கள். பழங்கால சிலைகள் மற்றும் பழங்கால பொருட்களை பாதுகாக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?' என, கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், 'சில வழக்குகளில் மட்டும்தான் இப்படியான ஆவணங்கள் மாயமாகி இருக்கின்றன. அதிலும் பல ஆவணங்கள் மீட்கப்பட்டு விட்டன. கடந்த காலங்களை போல சிலை திருட்டு சம்பவங்கள் தற்பொழுது அதிக அளவில் நடப்பதில்லை; அவற்றை பெரும் அளவில் குறைத்துள்ளோம்' என்றார்.

அப்போது மீண்டும் பேசிய நீதி பதிகள், 'கடந்த காலத்தை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், தொடர்ச்சியாக நம் பாரம்பரிய கலைப் பொருட்கள், பழங்கால சிலைகள் கடத்தப்படுவது தடுக் கப்பட வேண்டும்.

'இந்த விவகாரத்தில் இன்னும் தீவிரமாக தமிழக அரசு செயல்பட வேண்டும்' என்றனர்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் மனுதாரர் யானை ராஜேந்திரன் ஆஜராகவில்லை.

'அவரது தரப்பு கருத்து களையும் கேட்பது மிகவும் முக்கியம். ஏனென்றால், அவர் தான் சிலை கடத்தல் விவகாரத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

'எனவே வழக்கின் விசாரணையை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கி றோம். அதற்குள் தமிழ க அரசு கூடுதல் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்ட னர்.

- டில்லி சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us