sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நீதிபதி கீதா மிட்டல் கமிட்டி பதவிக்காலம் நீட்டிப்பு; ஜூலை 31 வரை பணியாற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு

/

நீதிபதி கீதா மிட்டல் கமிட்டி பதவிக்காலம் நீட்டிப்பு; ஜூலை 31 வரை பணியாற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு

நீதிபதி கீதா மிட்டல் கமிட்டி பதவிக்காலம் நீட்டிப்பு; ஜூலை 31 வரை பணியாற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு

நீதிபதி கீதா மிட்டல் கமிட்டி பதவிக்காலம் நீட்டிப்பு; ஜூலை 31 வரை பணியாற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு

5


UPDATED : ஜன 29, 2026 04:50 AM

ADDED : ஜன 29, 2026 01:27 AM

Google News

UPDATED : ஜன 29, 2026 04:50 AM ADDED : ஜன 29, 2026 01:27 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மணிப்பூரில் வன் முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகள் வழங்கப்பட்டு வருவதை கவனிக்க, நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவின் பதவிக் காலத்தை, வரும் ஜூலை 31 வரை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

எதிர்ப்பு

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், மெய்டி இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். கடந்த 2023, மே 3 அன்று பழங்குடியின அந்தஸ்து கோரி இவர்கள் பேரணி நடத்தினர். இதற்கு கூகி இனத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இடஒதுக்கீடு விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

பின்னர் கலவரமாக மாறியதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். கலவரம் நடந்தபோது, ஒரு பெண் நிர்வாணமாக கதறி துடித்தபடி ஓடி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதை கண்டு மிகுந்த கவலை அடைந்த உச்ச நீதிமன்றம், அம்மாநிலத்தில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை கவனிக்க, ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையில், மூன்று பேர் கொண்ட கமிட்டியை 2023, ஆக., 7ல் அமைத்தது.

மறுவாழ்வு

மும்பை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஷாலி பி.ஜோஷி, டில்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆஷா மேனன் ஆகியோரும் இந்த கமிட்டியில் இடம் பெற்றனர். மேலும், கிரிமினல் வழக்கு விசாரணையை கவனிக்க மஹாராஷ்டிரா மாநில முன்னாள் போலீஸ் டி.ஜி.பி., தத்தாத்ரேயாவை நியமித்தது.

இந்த கமிட்டியின் பதவிக் காலம் கடந்த ஜூலையுடன் நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அடங்கிய அமர்வின் கவனத்திற்கு நேற்று எடுத்துச் செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, வரும் ஜூலை 31ம் தேதி வரை நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான கமிட்டியின் பதவிக் காலத்தை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த கமிட்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வு குறித்து, இதுவரை 42 அறிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.






      Dinamalar
      Follow us