வாதாட எடுத்துக் கொள்ளும் நேரத்தை முதல் நாளே தெரிவிக்கணும்; வழக்கறிஞர்களுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு
வாதாட எடுத்துக் கொள்ளும் நேரத்தை முதல் நாளே தெரிவிக்கணும்; வழக்கறிஞர்களுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு
ADDED : டிச 30, 2025 05:00 PM

நமது டில்லி நிருபர்
வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர்கள் தாங்கள் வாதாட எடுத்துக்கொள்ளும் நேரத்தை ஒருநாளுக்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற நிர்வாகத்தை மேம்படுத்துவதை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
* மூத்த வழக்கறிஞர்கள், வாதிடும் வழக்கறிஞர்கள் வழக்கமான விசாரணை என அனைத்து விவகாரங்களிலும், தங்களது வாய்மொழி வாதங்களை முன்வைப்பதற்கான கால அளவை விசாரணை தொடங்குவதற்கு முன் தெரிவிக்க வேண்டும்.
* எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதை முன்கூட்டியே ஒரு நாள் முன்னதாக நீதிமன்றத்தின் ஆன்லைன் ஆஜராதல் சீட்டு போர்டல் மூலம் தெரிவிக்க வேண்டும்.
* அனைத்து வழக்கறிஞர்களும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை கண்டிப்பாக கடைபிடித்து தங்கள் வாதங்களை முடிக்க வேண்டும்.
* அமர்வுகள் நடவடிக்கைகளை சிறப்பாக திட்டமிடவும், ஒவ்வொரு நாளும் அதிகமான வழக்குகள் திறம்பட விசாரிக்கப்படுவதை உறுதி செய்யவும் உதவும்.
* எழுத்துப்பூர்வ பதில்கள் சமர்ப்பிப்பை, திட்டமிடப்பட்ட விசாரணை தேதிக்கு குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்னதாக தாக்கல் செய்ய வேண்டும்.எதிர் தரப்பினருக்கு முன்கூட்டியே வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

