sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ ஓட்டளிக்க கட்டாயப்படுத்த முடியாது உச்ச நீதிமன்றம் உத்தரவு

 ஓட்டளிக்க கட்டாயப்படுத்த முடியாது உச்ச நீதிமன்றம் உத்தரவு

 ஓட்டளிக்க கட்டாயப்படுத்த முடியாது உச்ச நீதிமன்றம் உத்தரவு

2


ADDED : ஏப் 17, 2026 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 01:33 AM

2


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- டில்லி சிறப்பு நிருபர் -

தேர்தலில் ஓட்டளிப்பதை கட்டாயமாக்க கோரியும், ஓட்டளிக்காதவர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்க உத்தரவிடக்கோரியும் தாக்கல் செய்யப் பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சிறை தண்டனை உச்ச நீதிமன்றத்தில் அஜய் கோயல் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'ஜனநாயகத்தின் அடிப்படை அழகே தேர்தலில் ஓட்டளிப்பது தான். ஆனால் ஓட்டு போடுவதை பலரும் புறக்கணிக்கின்றனர்.

இவ்வாறு ஓட்டளிக்காமல் இருப்பவர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு அரசின் எந்த சலுகைகளையும் வழங்கக் கூடாது' என, குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, விபுல் பஞ்சோலி அ மர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்தியா போன்ற நாட்டில் அனைவரும் கட் டாயம் ஓட்டளிக்க வேண்டும் என சொல்வது நடைமுறை சாத்தியமில்லாதது.

இங்குள்ள பொருளாதார சூழல்களையும் நாம் பார்க்க வே ண்டியிருக்கிறது.

தினமும் உழைத்தால் மட்டுமே ஒருவேளை சாப்பிடக்கூடிய நிலையில் உள்ள ஏழையை, கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும் என எப்படி கூற முடியும்? ஏராளமானோர் வெளியூர்களில் தங்கி வேலை செய்கின்றனர்.

என் அருகே அமர்ந்திருக்கும் நீதிபதி ஜாய் மால்யா பக்சி மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்.

அம்மாநிலத்தில் தேர்தல் நடக்கும் அன்று அவர் நீதி மன்ற அலுவல்களுக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு மேற்கு வங்கம் செல்ல முடியுமா? அதுமட்டுமில்லாமல் கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவில் தேர்தல் நடத்தப்பட்டு ஜனநாயக முறைப்படி தான் ஆட்சி ந டந்து வருகிறது.

தள்ளுபடி எனவே ஜன நாயகம் குறித்த விழிப் புணர்வை வேண்டுமானால் பொதுமக்களிடம் ஏற்படுத்தலாமே தவிர, அவர்களை ஓட்டளிக்கும்படி கட்டாயப் படுத்த முடியாது.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us