தொழிலக ஆல்கஹால் தயாரிப்பு; மாநில அரசுக்கே அதிகாரம்; நீதிபதிகள் 9 பேர் அடங்கிய அமர்வில் 8 பேர் ஒரே தீர்ப்பு
தொழிலக ஆல்கஹால் தயாரிப்பு; மாநில அரசுக்கே அதிகாரம்; நீதிபதிகள் 9 பேர் அடங்கிய அமர்வில் 8 பேர் ஒரே தீர்ப்பு
ADDED : அக் 23, 2024 12:15 PM

புதுடில்லி: 'தொழில்துறையில் பயன்படுத்தப்படும் ஆல்கஹாலை ஒழுங்குபடுத்தவும், வரி விதிக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது' என நீதிபதிகள் 9 பேர் அடங்கிய அமர்வில் 8 பேர் ஒருமித்த கருத்துடன் தீர்ப்பு அளித்தனர்.
தொழிலக பயன்பாட்டு ஆல்கஹால் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்தது. இந்நிலையில், இன்று(அக்.,23) தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், அபய் எஸ், பிவி நாகரத்னா, பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா, உஜ்ஜல் புயான், சதீஷ் சந்திர சர்மா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகிய 9 பேர் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்தது.
தொழில்துறையில் பயன்படுத்தப்படும் ஆல்கஹாலை ஒழுங்குபடுத்தவும், வரி விதிக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் 9 பேர் அடங்கிய அமர்வில் 8 பேர் ஒருமித்த கருத்துடன் தீர்ப்பு அளித்தனர்.
நீதிபதிகள் கூறியதாவது:
* தொழிலக ஆல்கஹால் பயன்பாடு தொடர்பான சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கே உரிமை உள்ளது. இதுபோன்ற அதிகாரங்களை மாநில அரசிடம் இருந்து பறிக்க முடியாது.
* தொழிலக ஆல்கஹால் மீது வரி விதிக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
தொழிலக ஆல்கஹால் தயாரிப்பு குறித்த மாநில அரசுகளின் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.