பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை (ஜன.08) தீர்ப்பு
பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை (ஜன.08) தீர்ப்பு
ADDED : ஜன 07, 2024 02:41 AM

புதுடில்லி: 'பில்கிஸ் பானு பாலியல் பலாத்கார வழக்கில் நாளை (ஜன.08) சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்தின் போது, பில்கிஸ் பானு என்ற பெண், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரும் இதில் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, 11 பேர், சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தனர். இந்நிலையில், குஜராத் அரசு இவர்களை கடந்தாண்டு சுதந்திர தினத்தின் போது, முன் கூட்டியே விடுதலை செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு குஜராத் மாநில அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பியது,
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், 14 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின், எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்? இதுபோன்ற சலுகைகள் மற்ற கைதிகளுக்கு பொருந்தாதா? முன் கூட்டியே விடுதலை என்ற சலுகைக்கு, இவர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்?என கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் இந்த வழக்கு கடந்தாண்டு அக்டோபரில் விசாரணைக்கு வந்த போது சாட்சியங்களிடம் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில் நாளை (ஜன.08) தீர்ப்பு வெளியாகிறது,