சட்டத்துக்கான அறிவிப்பாணை தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு
சட்டத்துக்கான அறிவிப்பாணை தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு
ADDED : ஜன 23, 2024 12:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட சட்டம் தொடர்பான அறிவிப்பாணையை வெளியிடும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடும் அதிகாரம் இல்லை என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
திவால் சட்டம் தொடர்பான சட்டம் பார்லிமென்டில் நிறைவேறியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பாணை வெளியிட உத்தரவிடக் கோரி, சீமா கய்யாம் என்பவர், பொது நலன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:
பார்லிமென்டில் நிறைவேற்றப்படும் சட்டம் தொடர்பான அறிவிப்பாணையை வெளியிட வேண்டியது, மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இது போன்ற கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

