ADDED : ஆக 06, 2024 05:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் மனுவை வரும் திங்கட்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், செந்தில்பாலாஜிக்கு குற்றம் புரிந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இதன் மூலம் அவருக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த முறைகேட்டிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் கூறுகிறார் . எவ்வளவு காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. எப்போது உருவாகின்றன என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளன. இது குறித்து போக்குவரத்து துறையின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் செய்யப்பட்ட ஆதாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து விசாரணையை நீதிபதிகள் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.