சூரத் தொகுதி பா.ஜ., வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
சூரத் தொகுதி பா.ஜ., வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
ADDED : ஏப் 22, 2024 03:50 PM

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பா.ஜ., வேட்பாளர் முகேஷ் தலாக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூரத் தொகுதியில் மற்ற அனைத்து வேட்பாளர்களும் வாபஸ் பெற்ற நிலையில் முகேஷ் தலாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தில் மொத்தம் உள்ள 26 லோக்சபா தொகுதிகளுக்கும் மே 7ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ம் தேதியுடன் நிறைவு அடைந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அ
ப்போது சூரத் தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியை முன்மொழிந்திருந்த 5 பேரில், மூன்று பேர் தங்களது கையெழுத்து இல்லை எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, காங்., வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பா.ஜ., வேட்பாளர் முகேஷ் தலாக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சூரத் தொகுதியில் மற்ற அனைத்து வேட்பாளர்களும் வாபஸ் பெற்ற நிலையில் முகேஷ் தலாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். லோக்சபா தேர்தல் முடியும் முன்பே முதல் எம்.பி.,யை பா.ஜ., பெற்றுள்ளது.

