ADDED : நவ 03, 2024 11:31 PM

சென்னப்பட்டணாவில் யோகேஸ்வர் வெற்றிக்காக, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் தீவிர பிரசாரம் செய்கிறார்.
ராம்நகரின் சென்னப்பட்டணா தொகுதிக்கு வரும் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் வேட்பாளர் யோகேஸ்வரை ஆதரித்து, துணை முதல்வர் சிவகுமார் தம்பியும், முன்னாள் எம்.பி.,யுமான சுரேஷ் இரவு, பகல் பாராமல் தீவிரமாக பிரசாரம் செய்கிறார்.
''யோகேஸ்வர் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, குளங்கள், ஏரிகளில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுத்தார். குமாரசாமி முதல்வராக இருந்தும் எதுவும் செய்யவில்லை. அவரது மகனுக்காக உங்கள் ஓட்டு,'' என்று கூறி ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
''குமாரசாமியிடம் நிறைய பணம் உள்ளது. மகனின் வெற்றிக்காக பணத்தை வாரி இறைப்பார். அவரிடம் பணம் வாங்கி கொள்ளுங்கள். ஆனால் யோகேஸ்வருக்கு ஓட்டு போடுங்கள்,'' என்றும் கூறுகிறார்.
'கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த, லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரல் தொகுதியில் சுரேஷ் தோற்றார். அவரது தோல்விக்கு யோகேஸ்வரும் ஒரு காரணம்.
ஆனால் அதை மறந்து விட்டு யோகேஸ்வர் வெற்றிக்காக, சுரேஷ் பிரசாரம் செய்கிறார்' என்று, சென்னப்பட்டணா காங்கிரஸ் தொண்டர்கள் தம்பட்டம் அடித்து கொள்கின்றனர்.
- நமது நிருபர் -