இ20 பெட்ரோல் விவகாரம்; அவதூறு பரப்புபவர்களுக்கு சுரேஷ் கோபி எச்சரிக்கை
இ20 பெட்ரோல் விவகாரம்; அவதூறு பரப்புபவர்களுக்கு சுரேஷ் கோபி எச்சரிக்கை
ADDED : நவ 08, 2026 11:39 AM

திருச்சூர்: அரசியல் லாபத்திற்காக, இ20 பெட்ரோல் குறித்து அவதூறு பரப்பினால், பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
திருச்சூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; கர்நாடகா, கேரள அரசுகள் பெட்ரோல் மாதிரிகளைப் பரிசோதிக்க முழு சுதந்திரம் இருக்கிறது. எத்தனால் கலப்புக் கொள்கைக்கு அறிவியல் பூர்வமான ஆதரவு உள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் அறிவியல் ரீதியான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, படிப்படியாக அதிகரிக்கப்படும். இ20 பெட்ரோல் விவகாரத்தில் அரசியல் நோக்கத்துடன் செயல்படக்கூடாது. அப்படி செய்தால், யார் தங்களுக்குத் தாங்களே குழி தோண்டிக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம், இவ்வாறு கூறினார்.
