ஆன்மிகம்
நாமஸ்மரன் - 2024
நாமஸ்மரன் சார்பில் 22ம் ஆண்டு ஸ்ரீ புரந்தரதாசா ஜெயந்தி, ஸ்ரீ கோபால கிருஷ்ணா பாகவதசுவாமி ஜெயந்தி நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு 97390 84469, 98455 37677 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நேரம்: அன்று காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை: புதுக்கோட்டை நரசிம்மன் பாகவதரின் உஞ்சவிருத்தி; 9:00 மணி முதல் 10:00 மணி வரை: மதுரை ஸ்ரீஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் பிரம்மஸ்ரீ மஹாதேவன் பாகவதர், பிரம்மஸ்ரீ வெங்கட்ராமன் பாகவதர் ஆகியோருக்கு குருபூஜை; 10:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை: மதுரை ஸ்ரீஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள், பஜனை வடிவில் ஸ்ரீராதா மாதவா கல்யாண உற்சவம்; பகல் 2:30 மணி முதல் 3:30 மணி வரை: ஆதிமூர்த்தி பாகவதரின் ஹனுமந்த் பிரபாவம்; 3:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை: காயத்ரி மகேசின் பஜனை; 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை: ஈரோடு ஸ்ரீ ராஜாமணி பாகவதரின் ஆஞ்சநேய உற்சவம் நடக்கிறது. இடம்: ஸ்ரீ சுரபாரதி சமஸ்கிருத கலாசார பவுண்டேஷன், 9வது 'சி' மெயின், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட் முதல் பிளாக், கல்யாண் நகர்.
பொது
தேவர் ஜெயந்தி விழா, குரு பூஜை
கர்நாடக தேவர் சங்கம் சார்பில் தேவர் 117 வது ஜெயந்தி விழா, 62வது குரு பூஜை. நேரம்: மாலை 3:30 மணி: திருவள்ளுவர் சிலை அருகில் இருந்து முளைப்பாரி / சிலம்பாட்டத்துடன் ஊர்வலம் புறப்பட்டு, பெங்களூரு தமிழ் சங்கம் வந்தடைதல்; 5:00 மணி முதல் இரவு 7:45 மணி வரை: பல்வேறு நிகழ்ச்சிகள். இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு, பெங்களூரு.
களிமண் பயிற்சி
ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
நடன பயிற்சி
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடன பயிற்சி. நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: நியூயார்க் டேன்ஸ் கிளாசஸ், 49, ரங்கா காலனி சாலை, பி.டி.எம்., இரண்டாவது ஸ்டேஜ், பெங்களூரு.
மெழுகுவர்த்தி பயிற்சி
16 வயதுக்கு மேற்பட்டோருக்கு மெழுகுவர்த்தி தயாரிக்க பயிற்சி. நேரம்: மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பெயின்ட் கபே ஸ்டுடியோ, நான்காவது தளம், டிரீ பார்க் மெட்ரோ ஸ்டேஷன், இ.சி.சி., சாலை, காடுகோடி, ஒயிட்பீல்டு.
யோகா, கராத்தே
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
இசை
ஹார்டு ராக் கபே வழங்கும் கிளாசிக் ராக் பெஸ்டிவ் இசை. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.
லாப்ட் 38 வழங்கும் பாலி பியஸ்டா இரவு இசை. நேரம்: இரவு 10:00 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: லாப்ட் 38, 763, எச்.ஏ.எல்., 2வது ஸ்டேஜ், 100 அடி சாலை, இந்திரா நகர்.
எஸ்கேப் பை பிரிவ்லின் வழங்கும் கரோக்கி எக்ஸ் இசை. நேரம்: இரவு 8:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: எஸ்கேப் பை பிரிவ்லின், 78/1, 14வது குறுக்கு சாலை, சாணக்யா லே - அவுட், நாகவாரா.
கிட்டிகோ வழங்கும் பிளாக் ஹார்ட்ஸ் இரவு இசை. நேரம்: இரவு 8:00 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: கிட்டி கோ, குமாரபார்க் ஈஸ்ட், சேஷாத்திரிபுரம், பெங்களூரு.
காமெடி
ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:45 மணி வரை. இடம்: பர்கர்மேன், 3,282, 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., 2வது ஸ்டேஜ், இந்திரா நகர்.
காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:45 மணி முதல் 9:55 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.
ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: தி அண்டர் கிரவுண்டு காமெடி கிளப், 480, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை மற்றும் 10:30 மணி முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:45 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2,212, 80 அடி சாலை, எச்.ஏ.எல்., 3வது ஸ்டேஜ், இந்திரா நகர்.

