sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக...

/

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...


ADDED : மார் 15, 2024 10:45 PM

Google News

ADDED : மார் 15, 2024 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஆண்டு விழா

வன்மீக மஹா மாரியம்மன் கோவில் 27 ம் ஆண்டு பிரதிஷ்டாபனை தினம். நேரம்: அதிகாலை 5:00 மணி: கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சிறப்பு ஹோமம்; 8:00 மணி: பிரசாதம் வழங்கல்; 9:30 மணி: ஸ்ரீதனலட்சுமி பூஜை; 11:30 மணி: பூர்ணாஹூதி; மதியம் 1:00 மணி: தீபாராதனை; 1:30 மணி: அன்னதானம்; இரவு 7:30 மணி: தேர் ஊர்வலம். இடம்: தன்மீக மஹா மாரியம்மன் கோவில், கல்லஹள்ளி, பெங்களூரு.

அஷ்வரூட ஹோமம்

மதியொளி சரஸ்வதி நிறுவிய நந்தலாலா ஆன்மிக அறக்கட்டளை சார்பில் உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு ஹோமம். நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை: லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம், சஹஸ்ரநாம அர்ச்சனை, சரஸ்வதி சஹஸ்ரநாம அர்ச்சனை, தஸ்வத்ரா ஊர்வலம் நடக்கிறது. இடம்: குசலாம்பாள் கல்யாண மஹால், இரண்டாவது பிளாக், ஜெயநகர், பெங்களூரு.

மண்டல பூஜை

வராஹி அம்மன் மண்டல பூஜை நடக்கிறது. நேரம்: இரவு 7:00 மணி: பஞ்சாமிர்த அபிேஷகம்; 8:30 மணி: தீபாராதனை. இடம்: தேவி கருமாரியம்மன் கோவில், 2, 3வது கிராஸ், தயானந்த நகர், ஸ்ரீராமபுரம்.

பஜனை உற்சவம்

வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

பங்குனி உத்திர பிரம்மோற்சவம்

தண்டபாணி ஞானமந்திரா கோவில் 35ம் ஆண்டு பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழா. நேரம்: காலை: மூலவருக்கு மஹா அபிேஷகம், மாலை: உற்சவருக்கு அலங்கார தீபாராதனை, சுவாமி புறப்பாடு, பாலமுருகன் அலங்காரம். இடம்: தண்டபாணி ஞானமந்திரா டிரஸ்ட், 65வது குறுக்கு , 10வது 'ஏ' பிரதான சாலை, ஐந்தாவது பிளாக், ராஜாஜி நகர்.

பொது

பெண் குழந்தையை காப்பாற்று

கர்நாடக பெண் தொழில் முனைவோர் மற்றும் இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி இணைந்து நடத்தும் மகளிர் தின விழாவில், பெண் குழந்தையை காப்பாற்று 'பேஷன் ேஷா' நடத்துகிறது. நேரம்: மாலை 5:30 மணி. இடம்: கர்நாடக சித்ரகலா பரிஷத், பெங்களூரு.

தேசிய மாநாடு

கர்நாடக சமஸ்கிருத பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீஸ்ரீ வேத ஆகம ஆய்வு மையம் இணைந்து 'தேசிய சைவ ஆகம மாநாடு' நடத்துகிறது. நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: விசாலாட்சி மண்டபம், வாழும் கலை சர்வதேச மையம், பெங்களூரு.

களிமண் பயிற்சி

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை

இ.ஓ.டி., வழங்கும் குளோ இன் தி டார்க் இசை. நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:50 மணி வரை. இடம்: ஈ.ஓ.டி., - என்ட் ஆப் தி டே, 146, இரண்டாவது தளம், ஐந்தாவது பிளாக், ஸ்ரீராமபுரம்.

ஒயிட் லோட்டஸ் வழங்கும் பாலி-டெக் இரவு இசை. நேரம்: இரவு 8:30 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: டபிள்யூ.எல்., சூப்பர் கிளப், 26, ஹரலுாரு பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

காமெடி

காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:30 மணி முதல் 8:40 மணி வரை. இடம்: 11, 80 அடி சாலை, 3வது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.

புளு பல்ப் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:15 மணி வரை. இடம்: 3282, பர்கர்மேன், 12வது பிரதான சாலை, இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.






      Dinamalar
      Follow us