ADDED : ஜூலை 18, 2025 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்:கேரளாவில் சில மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவி வருகிறது. 2 பேர் மரணம் அடைந்தனர். இந்நிலையில் கொல்லம் மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பதிவாகியுள்ளது. கொல்லத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் ஏராளமான மாணவர்களுக்கு காய்ச்சல் பரவியது.
அப்பள்ளியில் மருத்துவக்குழுவினர் பரிசோதனை நடத்தினர். நான்கு பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாதித்த மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கும் பரிசோதனை நடந்தது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.