10 ஓவர்... 10 ரன்... 10 விக்கெட்; வெறும் 5 பந்தில் முடிந்த டி20 கிரிக்கெட் போட்டி ; யாரு சாமி இது?
10 ஓவர்... 10 ரன்... 10 விக்கெட்; வெறும் 5 பந்தில் முடிந்த டி20 கிரிக்கெட் போட்டி ; யாரு சாமி இது?
UPDATED : செப் 05, 2024 10:58 AM
ADDED : செப் 05, 2024 10:10 AM

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் மோசமான சாதனையை மங்கோலியா அணி படைத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2026ம் ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
தகுதிச்சுற்று
அந்த வகையில், சிங்கப்பூர் மற்றும் மங்கோலியா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டி, மலேசியாவில் உள்ள யு.கே.எம்., - ஒய்.எஸ்.டி., ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற சிங்கப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
10 ரன்
அதன்படி, பேட் செய்த மங்கோலியா வீரர்கள், சிங்கப்பூரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 10 ஓவர்கள் மட்டுமே தாக்கு பிடித்த அந்த அணி 10 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக, கன்போல்டு, சுரேன்ட்செட்செக் தலா 2 ரன்களை மட்டுமே அடித்தனர். இதன்மூலம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ரன்னுக்கு சுருண்ட அணி என்ற சாதனையை மங்கோலியா படைத்துள்ளது.
பரத்வாஜ்
சிங்கப்பூர் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பரத்வாஜ் 4 ஓவர்களை 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
சாதனை
இதைத் தொடர்ந்து, விளையாடிய சிங்கப்பூர் வெறும் 5 பந்துகளிலேயே ஒரு விக்கெட் இழப்பிற்கு 13 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம், அதிக பந்துகளை (115 பந்துகள்) மீதம் வைத்து வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை சிங்கப்பூர் அணி பெற்றுள்ளது.