sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வரலாறு படைத்தார் இஷான் கிஷான்; 210 ரன்னை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

/

வரலாறு படைத்தார் இஷான் கிஷான்; 210 ரன்னை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

வரலாறு படைத்தார் இஷான் கிஷான்; 210 ரன்னை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

வரலாறு படைத்தார் இஷான் கிஷான்; 210 ரன்னை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

2


UPDATED : பிப் 12, 2026 08:56 PM

ADDED : பிப் 12, 2026 06:59 PM

Google News

2

UPDATED : பிப் 12, 2026 08:56 PM ADDED : பிப் 12, 2026 06:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன் குவித்துள்ளது. அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த இந்திய வீரர் இஷான் கிஷான் புதிய சாதனையை படைத்துள்ளார்.

டில்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில், இந்தியா, நமீபியாவை எதிர்த்து விளையாடி வருகிறது. அபிஷேக் ஷர்மா, சிராஜூக்கு பதிலாக, சஞ்சு சாம்சன், பும்ரா ஆகியோர் அணியில் இடம் பிடித்திருந்தனர். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய சஞ்சு சாம்சன், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2வது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர் மற்றும் பவுண்டரியை விளாசிய அவர், 8 பந்துகளில் 22 ரன் குவித்து அவுட்டானார்.

மற்றொரு முனையில் சிக்ஸர் மழையைப் பொழிந்த இஷான் கிஷான், டி20 உலகக்கோப்பையில் 20 பந்துகளில் தனது அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார். இதன்மூலம், டி20 உலகக்கோப்பை அதிவேக அரைசதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். முதல் நான்கு இடங்களில் யுவராஜ்சிங் (12 பந்துகள்), கேஎல் ராகுல் (18), ரோகித் ஷர்மா (19), யுவராஜ் சிங் (20), ஆகியோர் உள்ளனர். தவிர, டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் அரைசதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.



5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளை அடித்து 24 பந்துகளில் 61 ரன் குவித்து இஷான் கிஷான் ஆட்டமிழந்தார். இவரது அதிரடியால் இந்திய அணி 6.5 ஓவரிலேயே 100 ரன்னை கடந்தது. தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் (12), திலக் வர்மா (25) ஆகியோர் அவுட்டாகினர்.

ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபேவின் அதிரடியால் இந்திய அணி மளமளவென ரன் குவித்தது. ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் அரைசதம் அடித்த கையோடு அவுட்டானார். இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன் குவித்தது.






      Dinamalar
      Follow us