ADDED : ஜன 06, 2024 07:02 AM

ஹாவேரி: ஹாவேரியில் மணல் கடத்திய வழக்கில் பிடிக்கப்பட்ட இரண்டு லாரிகளை விடுவிக்க, ஜீப் ஓட்டுனர் மூலம் 12,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தார், ஜீப் ஓட்டுனரை லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.
ஹாவேரி ராணிபென்னுாரை சேர்ந்த மஞ்சுநாத் என்பவருக்கு சொந்தமான இரண்டு லாரிகள், மணல் கடத்தியதாக சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த லாரிகளை விடுவிக்க, தாசில்தார் ஹனுமந்த ஷிரஹட்டியை, மஞ்சுநாத் அணுகினார். அதற்கு தாசில்தார், 12,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதற்கு ஒப்புக்கொள்ளாத மஞ்சுநாத், லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனைப்படி, நேற்று காலை வீரபத்ரேஸ்வர் வீட்டிற்கு சென்ற மஞ்சுநாத், தாசில்தாரின் ஜீப் ஓட்டுனர் மாலதேஷ் மடிவாலாவிடம் 12,000 ரூபாய் கொடுத்தார்.
அதை வாங்கியபோது, அங்கு ஏற்கனவே இருந்த லோக் ஆயுக்தா போலீசார், மாலதேஷ் மடிவாலாவை பிடித்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தாசில்தாரையும் அவர்கள் கைது செய்தனர்.