தொன்மையான ராமர் கோயில் வரலாற்றை எடுத்து சொல்லுங்கள்: ஆதிர் ரஞ்சன் வலியுறுத்தல்
தொன்மையான ராமர் கோயில் வரலாற்றை எடுத்து சொல்லுங்கள்: ஆதிர் ரஞ்சன் வலியுறுத்தல்
ADDED : ஜன 09, 2024 04:41 PM

கோல்கட்டா: ‛ராமர் கோயில் வரலாறு என்பது மிகவும் தொன்மை வாய்ந்தது. அதன் வரலாற்றை மக்களிடம் எடுத்து கூற வேண்டும்' என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். திறப்பு விழா தொடர்பாக மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: ராமர் கோயில் வரலாறு என்பது மிகவும் தொன்மை வாய்ந்தது. இதில் பலரின் பங்களிப்பும் உள்ளது. எனவே, அதன் வரலாற்றை மக்களிடம் எடுத்து கூற வேண்டும்.
ஆனால் பிரதமர் மோடி, தன்னுடைய பெயரை உயர்த்தி கொள்வதற்காக, எந்த ஒருவரின் பெயரையும் குறிப்பிடுவதே இல்லை. இது மிகவும் பழைய போராட்டம். பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகிய இருவரும் இதற்கான பெருமை எடுத்துக்கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.