ADDED : ஏப் 10, 2025 06:51 AM

அமெரிக்காவின் வரி விதிப்பு உலக பொருளாதாரத்தை புரட்டிப் போட்டுள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையில் 16 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது. இந்திய பங்குச்சந்தையின் இழப்பு குறைவுதான். இருப்பினும் அமெரிக்காவுடன் வரிவிதிப்பு தொடர்பாக மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும்.
சசி தரூர்
லோக்சபா எம்.பி., -- காங்கிரஸ்
வக்ப் ஏற்றுக்கொள்ளப்படும்!
குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்தபோது எதிர்க்கட்சிகள் முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்றனர். ஆனால், அதுபோல் எதுவும் நடக்கவில்லை. வக்ப் சட்டத் திருத்தத்துக்கு இதேபோல் நிலங்கள் பறிக்கப்படும் என்கின்றனர். ஆனால் காலப்போக்கில் இந்த சட்டம் ஏற்றுக்கொள்ளப்படும்.
சிராக் பஸ்வான்
மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி
ஒரு மதத்தை குறிவைக்கின்றனர்!
மாதா வைஷ்ணவ தேவி கோவில் வாரியம் அல்லது அமர்நாத் கோவில் வாரியம் ஆகியவற்றின் நடவடிக்கையில் ஹிந்து அல்லாதவர்களை கண்காணிப்புக்கு நியமிப்பீர்களா? வக்ப் திருத்தச் சட்டத்தில் மட்டும் அதை செய்திருப்பது ஏன்? ஒரு மதத்தை மட்டும் அரசு குறிவைக்கிறது.
ஒமர் அப்துல்லா
ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி

