ADDED : ஜன 22, 2025 11:01 PM
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் சித்தூர் அரசு கல்லூரி தமிழ் துறை மற்றும் ஆய்வு மையம் சார்பில், நேற்று தமிழ் மன்ற தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
கல்லூரி இணை பேராசிரியர் ரவி தலைமை வகித்தார். கவிஞரும் பேச்சாளருமான சுடர்விழி துவக்கி வைத்து, 'தமிழுக்கும் அழகென்று பெயர்' என்ற தலைப்பில் பேசினார்.
நிகழ்ச்சியில், பாரதியார் பிறந்தநாள் முன்னிட்டு கல்லூரி அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
'படைப்பாளர் சந்திப்பு' என்ற தலைப்பில் எழுத்தாளரும் இயக்குனருமான லீனா மணிமேகலை, தன் பாலின ஈர்ப்பாளர்கள் சமூகத்தில் சந்திக்கும் சிக்கல்களை குறித்து எடுத்துரைத்தார்.
கல்லூரி மாணவர் மன்றத்தின் விளையாட்டு மன்ற செயலாளர் ஜிஜில், மாணவர் மன்ற செயலாளர் சிவப்பிரியா, ஆராய்ச்சி மாணவர்கள் லிவ்யா, பாவானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.