sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழ் மனம் கமழும் மாநாடு

/

தமிழ் மனம் கமழும் மாநாடு

தமிழ் மனம் கமழும் மாநாடு

தமிழ் மனம் கமழும் மாநாடு


ADDED : அக் 21, 2024 12:28 AM

Google News

ADDED : அக் 21, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 கர்நாடகாவின் பாரம்பரிய நாட்டுப்புற கலை டொல்லு குனிதா, தமிழர்களின் வீர விளையாட்டு சிலம்பாட்டம் மூலம், மாநாட்டுக்கு வந்த சிறப்பு விருந்தனர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது

 கர்நாடக வளர்ச்சி ஆணையத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா தலைமையில் கவியரங்கம் நடந்தது

 விராஜ்பேட்டை, மடிகேரி, தரிகெரேவில் வாழும் தமிழர்களுக்கு, அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் ஏற்பாட்டில் பஸ்களில் திரளாக வந்தனர்

 தங்கவயல், மங்களூரு, ஷிவமொகா, பத்ராவதி, தாவணகெரே, குடகு, மடிகேரி, சித்தாபுரா, சிக்கமகளூரு, ஹாசன், கோலார், ஹூப்பள்ளி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்

 பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லுாரி தமிழ் சங்கத்தின் 35 பேர் கொண்ட குழுவும்; நம்ம ஊர் தமிழ் மக்கள் குழு சார்பில், 40 பேர் கொண்ட குழுவும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை நடத்தி, மாணவர்களையும், இளைஞர்களையும் உற்சாகமூட்டினர். சிறிய சிறிய சிறார்களின் நடனம் பார்ப்போரை வியக்க வைத்தது

 மொத்தம் 12 பேர் கொண்ட இளைஞர்கள் குங்பூ தற்காப்பு கலை செய்து காண்பித்து, பார்வையாளர்களின் கை தட்டலை பெற்றனர்

 மாநாட்டில் பங்கேற்ற தமிழ் அமைப்புகளுக்கு, தலா 2 கிராம் தங்க காசுகள் வழங்கியும், நிர்வாகிகளையும் பாராட்டியும் கவுரவிக்கப்பட்டனர்

 'நிமிர் இலக்கிய வட்டம்' நிறுவனர் கவிஞர் கா.பாபுசசிதரன் தலைமையில் சிறப்பு தமிழ்க் கவியரங்கம் நடந்தது. கவிஞர்கள் கவி பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்

 பாரம்பரிய உணவான குழிப்பணியாரம் முதல் தற்போதைய மொமோஸ் வரையிலும் பல வகையான உணவு ஸ்டால்கள் இடம்பெற்றிருந்தன

 தமிழர்களின் தொன்மையை போற்றும் வகையில், கீழடி முதல், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என தமிழ் மொழி கண்காட்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.






      Dinamalar
      Follow us