sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழக துணை சபாநாயகர் புத்தக திருவிழாவில் பங்கேற்பு

/

தமிழக துணை சபாநாயகர் புத்தக திருவிழாவில் பங்கேற்பு

தமிழக துணை சபாநாயகர் புத்தக திருவிழாவில் பங்கேற்பு

தமிழக துணை சபாநாயகர் புத்தக திருவிழாவில் பங்கேற்பு


ADDED : டிச 26, 2024 06:46 AM

Google News

ADDED : டிச 26, 2024 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:தமிழ் புத்தக திருவிழாவில், தமிழக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பங்கேற்றார்.

பெங்களூரு தமிழ் புத்தக திருவிழாவின் ஆறாவது நாளாக நேற்று, புத்தகங்கள் வெளியிடப்பட்டன. சிறப்பு விருந்தினராக தமிழக சட்டசபை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பங்கேற்றார்.

கர்நாடக தி.மு.க., முன்னாள் பொறுப்பு குழுச் செயலர் கிள்ளிவளவன், அவை தலைவர் பெரியசாமி, பொருளாளர் தட்சிணாமூர்த்தி, இலக்கிய அணிச் செயலர் போர்முரசு கதிரவன், அமைப்பாளர் சிவமலை, இளைஞர் அணியின் விக்ரம், மும்பை இலெமுரிய அறக்கட்டளை நிறுவனர் குமணராசன் கலந்து கொண்டனர்.

பிச்சாண்டி பேசியதாவது:

பெங்களூரில் மூன்றாம் ஆண்டு, தமிழ் புத்தக திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இதற்காக கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு என் வாழ்த்துகள். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்த முதல் மாநிலம் தமிழகம்.

இதனால் விவசாயம் இன்று முன்னோடியாக திகழ்கிறது. பெண்களை எந்த நாடு மதிக்கிறதோ, அந்த நாடு உயர்வாக அமையும் என, கருணாநிதி கூறினார்.

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமை தொகையாக கொடுக்கிறோம். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் முன்வைத்தவர் கருணாநிதி. காலை உணவு திட்டம் அமலில் இருப்பது, தமிழகத்தில் மட்டும் தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் நாளிதழ் சார்பில் 'சோழர்கள் இன்று' புத்தகம், கு.பிச்சாண்டிக்கு நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி முடிந்ததும், 'மகிழ்வும் நிறைவும் மணவாழ்வுக்கு முன்பே... பின்பே! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. கவியருவி அப்துல்காதர் தலைமையில் நடந்த பட்டிமன்றத்தில், 'முன்பே' என்ற தலைப்பில் சரளா ஆறுமுகம், ஜுவைரியா தஹ்சீன், வேலுமணி; 'பின்பே' என்ற தலைப்பில் ராஜேந்திரபாபு, சீனிவாசன், வித்யா ஆகியோர் பேசினர்.

முடிவில், 'பின்பே' தலைமையிலான அணியினர் வென்றனர்.

பட விளக்கம்

26 12 2024 blr ph 5

தமிழ் புத்தக திருவிழாவில் பங்கேற்ற, தமிழக சட்டசபை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டிக்கு சால்வை, மைசூரு தலைப்பாகை அணிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us