sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேசிய ஓமியோபதி நிறுவனம் அமைய ஆர்வம் காட்டாத தமிழக அரசு: மத்திய அரசு

/

தேசிய ஓமியோபதி நிறுவனம் அமைய ஆர்வம் காட்டாத தமிழக அரசு: மத்திய அரசு

தேசிய ஓமியோபதி நிறுவனம் அமைய ஆர்வம் காட்டாத தமிழக அரசு: மத்திய அரசு

தேசிய ஓமியோபதி நிறுவனம் அமைய ஆர்வம் காட்டாத தமிழக அரசு: மத்திய அரசு

3


ADDED : மார் 13, 2026 09:57 PM

Google News

3

ADDED : மார் 13, 2026 09:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'தேசிய ஓமியோபதி நிறுவனத்தை, தமிழகத்தில் துவக்க, மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை' என, மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லுாரி உட்பட, 14 கல்லுாரிகள் உள்ளன. மேலும், 9,705 பதிவு பெற்ற ஓமியோபதி மருத்துவர்கள் உள்ளனர். மேலும், பலர் படித்து வருவதால், இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் உயரக்கூடும். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், 'தமிழகத்தில் தேசிய ஓமியோபதி நிறுவனம் இல்லை. அதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா' என, லோக்சபாவில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு, மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், 'ஓமியோபதி சார்ந்த ஆராய்ச்சி செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன. தமிழக அரசிடமிருந்து, தேசிய ஓமியோபதி நிறுவனத்தை நிறுவுவது தொடர்பாக, எவ்வித முன்மொழிவும் இதுவரை பெறப்படவில்லை. மத்திய அரசும் அத்தகைய திட்டத்தை முன்வைக்கவில்லை,' என, பதில் அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us