டாஸ்மாக் வழக்கை உச்சநீதிமன்றத்தில் திரும்ப பெற்றது தமிழக அரசு!
டாஸ்மாக் வழக்கை உச்சநீதிமன்றத்தில் திரும்ப பெற்றது தமிழக அரசு!
UPDATED : ஏப் 08, 2025 02:51 PM
ADDED : ஏப் 08, 2025 02:49 PM

புதுடில்லி: டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு திரும்ப பெற்றது.
சென்னையில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்தினர். இதன்பின், கொள்முதல், விற்பனை போன்றவற்றின் வாயிலாக, 1,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்ததாக, அமலாக்கத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இதற்கிடையே, 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில், அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (ஏப்ரல் 08) விசாரணைக்கு வந்தது.
அப்போது,'டாஸ்மாக் வழக்கு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு தெரிவித்து விட்டது. டாஸ்மாக் விவகாரத்தில் உயர் நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு திரும்ப பெற்றது.