sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழக கவர்னர் ரவி மேற்கு வங்கத்திற்கு திடீர் மாற்றம் ; கேரள கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு

/

தமிழக கவர்னர் ரவி மேற்கு வங்கத்திற்கு திடீர் மாற்றம் ; கேரள கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு

தமிழக கவர்னர் ரவி மேற்கு வங்கத்திற்கு திடீர் மாற்றம் ; கேரள கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு

தமிழக கவர்னர் ரவி மேற்கு வங்கத்திற்கு திடீர் மாற்றம் ; கேரள கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு

57


UPDATED : மார் 06, 2026 09:08 AM

ADDED : மார் 06, 2026 02:21 AM

Google News

57

UPDATED : மார் 06, 2026 09:08 AM ADDED : மார் 06, 2026 02:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொல்கட்டா : மேற்கு வங்க கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் ராஜினாமா செய்ததையடுத்து, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அம்மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, 'கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர், தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பை கவனிப்பார்' என, ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு கவர்னராக இருந்த சி.வி.ஆனந்த போஸுக்கும், மம்தாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. தமிழகத்தை போல மேற்கு வங்கத்திலும் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது .

இந்நிலையில், அம்மாநில கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். முன்னதாக டில்லி சென்ற அவர், ஜனாதிபதி மாளிகைக்கு தன் பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.



காரணங்கள் வெளியிடவில்லை



இதையடுத்து, தமிழக கவர்னராக உள்ள ஆர்.என்.ரவி, மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.

டில்லியில் தங்கியுள்ள சி.வி.ஆனந்த போஸை, பி.டி.ஐ., செய்தி நிறுவனம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டது.

அப்போது அவர் கூறுகையில், “ஆம், நான் ராஜினாமா செய்துவிட்டேன். நான் மூன்றரை ஆண்டுகளாக மேற்கு வங்க கவர்னராக இருந்துள்ளேன். அது எனக்கு போதுமானது,” என்றார்.

இவரது பதவிக்காலம் வரும் நவம்பர் 2027 வரை உள்ள நிலையில், இந்த திடீர் முடிவின் பின்னணியில் உள்ள காரணங்களை அவர் வெளி யிடவில்லை.

ராஜினாமா கடிதம் டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பப்பட்டதை, மேற்கு வங்க லோக் பவனில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்தனர்.

கேரள கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு


இந்நிலையில், டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கை:

மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போசின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, மேற்கு வங்கத்தின் புதிய கவர்னராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நியமிக்கப்படுகிறார். கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர், தமிழக கவர்னருக்கான பணிகளை கூடுதலாக கவனிப்பார்.

ஹிமாச்சல பிரதேச கவர்னர் ஸ்ரீ சிவ பிரதாப் சுக்லா, தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா கவர்னர் ஸ்ரீ ஜிஷ்ணு தேவ் வர்மா, மஹாராஷ்டிராவின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து கவர்னராக ஸ்ரீ நந்த் கிஷோர் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பீஹார் கவர்னாக ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் சையத் அதா ஹஸ்னைன் நியமிக்கப்பட்டுள்ளார். லடாக்கின் துணைநிலை கவர்னர் ஸ்ரீ கவிந்தர் குப்தா, ஹிமாச்சல பிரதேச கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டில்லி கவர்னர் ஸ்ரீ வினய் குமார் சக்சேனா, லடாக்கின் துணைநிலை கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். டில்லியின் துணைநிலை கவர்னராக ஸ்ரீ தரஞ்சித் சிங் சாந்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நியமனங்கள் அனைத்தும், அந்தந்த அலுவலகங்களுக்கு அவர்கள் பொறுப்பேற்கும் தேதிகளிலிருந்து நடைமுறைக்கு வரும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us