sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழக வாக்காளர் பட்டியலில் முறைகேடு வழக்கு: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்

/

தமிழக வாக்காளர் பட்டியலில் முறைகேடு வழக்கு: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்

தமிழக வாக்காளர் பட்டியலில் முறைகேடு வழக்கு: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்

தமிழக வாக்காளர் பட்டியலில் முறைகேடு வழக்கு: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்

6


UPDATED : ஜன 29, 2026 11:02 PM

ADDED : ஜன 29, 2026 03:48 PM

Google News

UPDATED : ஜன 29, 2026 11:02 PM ADDED : ஜன 29, 2026 03:48 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தமிழக வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இன்று (ஜனவரி 29) தலைமை தேர்தல் கமிஷனுக்கு சில முக்கிய வழிகாட்டுதல்கள் பிறப்பித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு வழங்கிய முக்கிய வழிகாட்டுதல்கள்:


வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டவர்களின் பெயர்களை, அந்தந்த கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் மற்றும் நகர்ப்புற வார்டு அலுவலகங்களில் பொதுப்பார்வைக்கு வைக்க வேண்டும்.

இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் தங்களின் ஆவணங்களைச் சமர்ப்பிக்க அல்லது ஆட்சேபனைகளைத் தெரிவிக்க, பட்டியல் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்

பொதுமக்கள் சிரமமின்றி ஆவணங்களைச் சமர்ப்பிக்க, துணைப் பிரிவு அல்லது வட்டார அளவிலான அலுவலகங்களில் இதற்கான வசதிகளைச் செய்ய வேண்டும்.

இந்தச் சிறப்புத் திருத்தப் பணிகளை தடையின்றி நடத்த அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.சரிபார்ப்புப் பணிகளின் போது எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us