தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பாத்திரங்களை தட்டியும், மேளங்களை அடித்தும் மணிப்பூரில் ஐந்து மாவட்டங்களில் போராட்டம்

பாத்திரங்களை தட்டியும், மேளங்களை அடித்தும் மணிப்பூரில் ஐந்து மாவட்டங்களில் போராட்டம்

பாத்திரங்களை தட்டியும், மேளங்களை அடித்தும் மணிப்பூரில் ஐந்து மாவட்டங்களில் போராட்டம்


UPDATED : அக் 25, 2026 06:35 PM

ADDED : அக் 25, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 06:35 PM ADDED : அக் 25, 2026 06:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இம்பால்: மணிப்பூரில் தொடரும் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாத்திரங்களை தட்டியும், மேளங்களை அதிக சத்தத்துடன் ஒலித்தும், வாகன ஒலிப்பான்களை அலறவிட்டும் ஐந்து மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், 2023nd கூகி மற்றும் மெய்டி இன பழங்குடி மக்களுக்கு இடையே இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மோதல் வெடித்து இனக்கலவரமாக மாறியது. தற்போதும் தொடரும் சம்பவங்களில், இதுவரை, 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

கடந்த 19ம் தேதி காங்க்போக்பி மாவட்ட வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற மெய்டி இனத்தைச் சேர்ந்த மூவர், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஐந்து மாவட்டங்களில், வித்தியாசமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹாவோமி கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த, ஒலி போராட்டம் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை நடந்தது. அப்போது ஸ்டீல் பிளேட்டுகளை பயங்கர சத்தத்துடன் தட்டியும், பாத்திரங்களை ஒலித்தும், மேளங்களை முழங்கியும், மின்கம்பங்களை சுத்தியலால் தட்டியும், வாகன ஒலிப்பான்களை அலறவிட்டும் போராட்டம் நடத்தினர்.

அப்போது தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்துதல், சட்டவிரோத குடியேறிகளை கண்டறிதல் மற்றும் மாநிலத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அரசை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக முதல்வர் மற்றும் கவர்னர் இல்லம் அமைந்துள்ள பகுதியில் உள்ள கங்லா கோட்டையை நோக்கி போராட்டக்காரர்கள் அணிவகுத்து சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனாலும் திரளானோர் அந்த கோட்டைக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us