பா.ஜ., முக்கிய தலைவர்களுக்கு 'குறி'; 2 பயங்கரவாதிகள் கைது
பா.ஜ., முக்கிய தலைவர்களுக்கு 'குறி'; 2 பயங்கரவாதிகள் கைது
ADDED : செப் 26, 2026 05:00 AM

சிக்கபல்லாபூர்: பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ஜ., முக்கிய தலைவர்களுக்கு குறி வைத்ததுடன், நாடு முழுதும் பயங்கரவாத செயல்களுக்கு சதித்திட்டம் தீட்டிய இருவரை, கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. 'இங்குள்ள சிக்கபல்லாபூரில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற முயற்சி நடக்கிறது. இதற்காக, 'டெலிகிராம்' தகவல் பரிமாற்ற செயலியில் குழு அமைத்து சதி திட்டம் தீட்டுகின்றனர்' என, மாநில அரசின் உளவுத்துறைக்கு மத்திய அரசிடம் இரு ந்து தகவல் கிடைத்தது.
விசாரணையில், சிக்கபல்லாபூர் டவுன் பாபுஜி நகரில் வசிக்கும் சபீர், 23, என்பவர், 'டெலிகிராம் குரூப்' அமைத்து, நாட்டுக்கு எதிரான மனநிலையில் இருப்பவர்களை ஒருங்கிணைத்து அந்த குழுவில் பேசியதும், நாடு முழுதும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டியதும் தெரிந்தது.
கடந்த 23ம் தேதி சபீரை போலீசார் கைது செய்தனர். இவரது டெலிகிராம் குரூப்பில் இருந்த, ஹாசன் மாவட்டம், அரகலகூடுவில் வசிக்கும் சல்மான், 25, என்பவரும், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்.
முதற்கட்ட விசாரணையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கர்நாடகாவின் பசனகவுடா பாட்டீல் எத்னால், சி.டி.ரவி, பிரதாப் சிம்ஹா போன்ற தலைவர்களுக்கு இவர்கள் குறி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
சிக்கபல்லாபூர் எஸ்.பி., பத்மினி சாஹூ நேற்று அளித்த பேட்டி: இவர்கள் நாட்டின் பல இடங்களில் குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தனர். வெடிபொருட்கள் வாங்க பணம் புரட்டும் நோக்கில், பணக்காரர்களை கடத்தி, பணம் பறிக்கவும் தயாரானது தெரியவந்தது. கைதான இருவரிடமும் விசாரணை நடக்கிறது. டெலிகிராம் குரூப்பில் இருந்தவர்களை கண்டறிந்து, அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினா
