ADDED : மே 27, 2025 09:09 PM
ஓக்லா:ஓக்லாவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக, சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீது நோட்டீஸ்களை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.
தென்கிழக்கு டில்லியின் ஓக்லா பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மேலும் டி.டி.ஏ., எனும் டில்லி மேம்பாட்டு ஆணையத்தின் சட்டப்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும்.
அந்த வகையில் ஓக்லா பகுதியில் அடுத்த மாதம் 11ம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற டி.டி.ஏ., முடிவு செய்துள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கும் பணியை 22ம் தேதி டி.டி.ஏ., துவங்கியது.
இரண்டாவது முறையாக நேற்று முன் தினமும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு டி.டி.ஏ., நோட்டீஸ் வழங்கியது. குறிப்பிட்ட அவகாசத்துக்குள் தங்கள் உடைமைகளுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற வேண்டும் என, நோட்டீசில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.