மாற்று விமானம் மூலம் டில்லி சென்றார் பிரதமர் மோடி
மாற்று விமானம் மூலம் டில்லி சென்றார் பிரதமர் மோடி
UPDATED : நவ 15, 2024 08:01 PM
ADDED : நவ 15, 2024 03:40 PM

ராஞ்சி: பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து டில்லிக்கு புறப்பட இருந்த போது அவரது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரது பயணம் தாமதம் ஆனது. தொடர்ந்து மாற்று விமானம் மூலம் மோடி டில்லி சென்றடைந்தார்.
பீஹார் மாநிலம் ஜமுய் நகரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பல கோடி மதிப்புள்ள அரசு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். பிறகு ஜார்க்கண்ட் மாநிலம், தியோகர் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
கூட்டம் முடிந்த பிறகு, பிரதமர் டில்லி கிளம்ப இருந்த நேரத்தில் அவர் பயணம் செய்ய இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது. என்ன மாதிரியான கோளாறு என்பது அறிவிக்கப்படவில்லை. இதனையடுத்து, அந்த விமானத்திற்கு மாற்றாக இந்திய விமானப்படை விமானம் வரவழைக்கப்பட்டது. அதன் மூலம் பிரதமர் டில்லி சென்றடைந்தார்.