தொழில்நுட்ப கோளாறு: 8 மணி நேரத்திற்கு பிறகு டில்லி திரும்பிய ஏர் இந்தியா விமானம்
தொழில்நுட்ப கோளாறு: 8 மணி நேரத்திற்கு பிறகு டில்லி திரும்பிய ஏர் இந்தியா விமானம்
ADDED : மே 27, 2026 05:22 PM

புதுடில்லி: டில்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ நகர் சென்ற ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக 8 மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் டில்லி திரும்பியது.
டில்லியில் இருந்து 230 பயணிகளுடன் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்குஏர் இந்தியா விமானம் கிளம்பி சென்றது. சீன வான்வெளியில் சென்று கொண்டிருந்தபோது அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானிகள் கண்டறிந்தனர்உடனடியாக விமானத்தை டில்லிக்கு திருப்ப விமானிகள் முடிவு செய்தனர். அதன்படி 8 மணி நேரம் வான்வெளியில் பயணித்த அந்த விமானம், டில்லியில் பத்திரமாக தரை இறங்கியது.
இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வழக்கமான நடைமுறைப்படி ஏர் இந்தியா விமானம் டில்லி திரும்பியது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கிவிடப்பட்ட பிறகு, தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தை சோதனை செய்து வருகின்றனர். பயணிகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யும் பணி நடக்கிறது. அவர்களுக்கு தேவையான உதவிகளை ஊழியர்கள் செய்து வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
